ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர் (46). இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்கள் சனி ஹரிகா (18), அபிக்கன்யா (17) உடன் வசித்து வருகிறார். வேகசிட்டி ஜூனியர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் அபிக்கன்யா, கடந்த 2ம் தேதியன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு போன் செய்த சந்திரசேகர், சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே என்னுடைய மகள் மனசோர்வில் இருந்தார்.
அன்று காலை என்னுடைய மனைவி நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றிருந்தார். அப்போது எனக்கு போன் செய்த என்னுடைய மற்றொரு மகள், அபிக்கன்யா அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். உடனே விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அபிக்கன்யா இறுதியாக எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக சந்திரசேகர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதில், கல்லூரியில் படிக்கும் சகமானவர்களே தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கடிதம் பற்றிய தகவல்களை வெளியிடாத பொலிஸார் கல்லூரி மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.