பொள்ளாச்சி விவகாரத்தில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பார் நாகராஜன் இரு பெண்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களை மிரட்டி அவர்களைப் பணிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த கும்பல் இப்படி 40ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்துள்ளது. இதையடுத்து வசந்தகுமார், சபரி, திருநாவுக்கரசு, சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து புகார் அளித்த பெண்ணின் அண்ணனை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, பெண்ணின் அண்ணனை மிரட்டியதாகச் செந்தில், பாபு, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய நான்கு பேர் கைதானார்கள். இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இவருக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்மதமும் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர் சம்பத்தப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன..அந்த வீடியோ பதிவு இதோ