மது அருந்திவிட்டு குடி போதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த சக நண்பர்கள்!!!! வைரலாகும் வீடியோ

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்தவர் இளைஞர் மவீன். பெங்களூருவில் தச்சுத் தொழில் செய்து வரும் இவர், சனி, ஞாயிறு விடுமுறையை ஒட்டி ஊருக்கு வந்துள்ளார். நேற்று மாலை அவரது நண்பர்கள், சுதர்சன், பவீத், ராகுல், கல்யாண குமார், அருண் குமார், அஜித் குமார் ஆகியோருடன் சேர்ந்து மவீன் மது அருந்த தோப்புக்குச் சென்றுள்ளார். அப்போது அனைவருக்கும் போதை தலைக்கேறியது.அனைவரும் வீடு திரும்பி விட்ட நிலையில், மவீன் மட்டும் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் இன்று காலை அவர்கள் மது அருந்திய தோப்பில் உள்ள கிணற்றில் மவீனின் சடலம் மிதந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிணற்றின் உரிமையாளர் ஊர்மக்களுக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மவீனின் உறவினர்கள் அங்கு வந்து பார்க்கையில், மவீனின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனை ஆராய்கையில், மவீன் எவ்வாறு இறந்தார் என்ற நேரடிக் காட்சிகள் பதிவாகியிருந்தன.போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுடன் மவீன் வாக்குவாதம் செய்யும்

காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தது- மேலும் மவீனைப் பிடித்து ஒருவர் தள்ளி விடுவதும், பின்னர் அனைவரும் கிணற்றில் குதித்து குளிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.குளித்து முடித்துவீட்டு ஓரளவு போதையில் இருந்த நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில்,

முழு போதையில் இருந்த மவீன் மட்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது- இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்