மனைவியுடன் சேர்ந்து பல தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஏமாற்றிய கணவன்..! அதிரவைக்கும் பின்னணி

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(59) என்பவர் அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி கம்பெனியினை நடத்தி வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கிளையில் தன்னுடைய கணக்கினை சரிபார்த்துள்ளார்.அப்போது 3 கோடியே, 92 லட்சத்து, 78 ஆயிரத்து, 768 ரூபாய் கடனாக பெற்றிருப்பதாக தன்னுடைய கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, உடனடியாக திருப்பூர் கமிஷனரிடம் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,முதலிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (35) மற்றும் அவருடைய மனைவி பிரியா (31) என்பவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என தவிர்க்கப்பட்ட பின்னலாடை அதிபர்களை சந்தித்து பணம் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.

அதனை நம்பிய தொழிலபர்கள் ஹாரூன் ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி ஆகியோர் தம்பதியினரிடம் தங்களுடைய ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர்.அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தம்பதியினர் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.18 கோடி கடன் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் தலைமறைவாகியுள்ள செந்தில் குமாரின் நண்பர் ராஜேஷ் கண்ணாவையும் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.