தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி தீபா, மகள்கள் தேஜாஸ்ரீ(6) ,பிரதீபா(3) ஆகியோருடன் வசித்து வந்தார். மணிகண்டன் கன்னிவாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபா மற்றும் மகள்கள் தேஜாஸ்ரீ (6), பிரதீபா(3) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், வேலைமுடிந்து நேற்று வீடு திரும்பிய மணிகண்டன், குடும்ப வேலை நிமித்தமாக கன்னிவாடி பகுதிக்கு செல்வதற்கு தன்னுடன் வரும்படி தீபாவை அழைக்க அவர் வர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்பு காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அங்கு நடந்தவற்றை பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்தார் மணிகண்டன். இதையடுத்து பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.