மதுரையில் 16 வயது மாணவனை கடத்தி நான்கு நாட்கள் தனியறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டத்தில் செல்லூர் பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் இவர் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். அவரிடம் டியூசன் பயின்ற 16 வயது மாணவன் மீது நிர்மலாவிற்கு மோகம் ஏற்பட்டு உள்ளது அதை தொடர்ந்து பல சமயம் அந்த மாணவர்களுடன் தனிமை கழித்துள்ளார் நிர்மலா. பின்னர் சில நாட்கள் கழித்து மாணவனின் விருப்பத்திற்கு மாறாக
தனியாக அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து நான்கு நாட்கள் பாலியல் முறையில் தொல்லை கொடுத்து வந்துள்ளார் நிர்மலா. பின்னர் வீடு திரும்பிய மாணவன் தனது டியூசன் ஆசிரியை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியை நிர்மலா மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த வாரம் ஆரணியை சேர்ந்த நித்யா எனும் ஆசிரியை ஐ.டி.ஐ பயிலும் 17 வயது மாணவனை கடத்தி
பாலியல் தொல்லை கொடுத்தும் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பார்த்து ரசித்தும் வந்துள்ளார். பின்னர் மாணவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.