கேரளா மாநிலத்திலுள்ள உள்ள தேவரா பகுதியில் இருக்கும் லூர்து மாதா சர்ச் முன்பாக தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதாவது, கொச்சி மாவட்டம் எலம்காரா பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற 56 வயதான போக்குவரத்து காவலர் தேவரா பகுதியிலுள்ள லூர்து மாதா சர்ச் முன்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் பெண்களும், மாணவிகளும் பயமில்லாமல் சென்று வந்துள்ளனர்.அந்த சமயத்தில், சிவக்குமார் தன் அருகில் இளம்பெண்களும் மாணவிகளும் கடந்து செல்லும் போது அவர்களின் பின்பக்கத்தை தடவுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.அந்த மாணவிகளில் சிலர் இதை தற்செயலாக எடுத்து கொண்டு கவனிக்காமல் கடந்துவிடுகின்றனர்.
ஆனால் அதில் ஒருசில மாணவிகள் அவர் தட்டுவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதை உணர்ந்து திரும்பி அவரை பார்க்கிறார்கள். அவர் யாரையும் கவனிக்காததை போல திரும்பி நின்று கொள்கிறார்.இந்த சம்பவம், அப்பகுதியில் இருந்த ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சிசிடிவி காட்சி எப்படியோ சமூக வலைதளத்தில் வெளியாகவே மக்கள் குறித்த பொலிசார் மீதான கோபத்தை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த வீடியோ வெளியான உடனேயே இவரை பணியில் இருந்து இடைநீக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டும் உள்ளது.