மீண்டும் சூடுபிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம் !! சிறுமியை கற்பழித்து கொலை செய்த கொடூரம் !! வெளிவந்த அதிர்ச்சி ஆடியோ !!

தமிழகத்தையே நடுநடுங்க வைத்த நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி விவகாரம் கடந்த இரண்டு வாரங்கள் வரை பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தல் செய்திகள் காரணமாக திடீரென பின்வாங்கிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சற்றுமுன் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில் பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கபட்ட பெண் ஒருவர் பேசியுள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் எட்டு பேர்களுக்கும் மேல் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், தான் உள்பட ஐந்து பெண்கள் அந்த பங்களாவில் சிக்கியிருந்தபோது, தன்னுடன் இருந்த ஒரு சிறுமியை அனைவரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும்.

அதனால் அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.இந்த ஆடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சிறுமியின் பிணத்தை அந்த கும்பலில் இருந்தவர்கள் அந்த பங்களாவின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் இது முழுக்க முழுக்க உண்மை என்றும், இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆடியோவில் பேசியுள்ள பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. இந்த ஆடியோவில் பேசிய பெண் கூறியது உண்மையாக இருக்குமானால்.

திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர்களும் கொலை வழக்கில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் மக்கள் பார்வையில் சிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.