முதன் முறையாக தன் மகளை வெளி உலகத்துக்கு காட்டிய காமெடி நடிகர் விவேக்..!

விவேக் தமிழ்த் திரைப்படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

விவேக் மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி. இதில் அமிர்த நந்தினி 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்து வருகிறார்.கடந்த 2015ஆம் ஆண்டு இளையமகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர்.

அமிர்த நந்தினி பிறந்தவுடன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு சென்று எனது மகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என கேட்டுள்ளார் விவேக். உடனே அமிர்தநந்தினி என ராகங்களில் ஒரு பெயரை வைத்துள்ளார் இசைஞானி.. இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக் . அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக்.