ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இறங்கி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம அபராதம் செலுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதின, பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி ஓவரின் போது, நடுவர் நோ பால் கொடுக்காமல் மறுத்ததால் இதனால் கோபமடைந்த டோனி, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எப்போதும் கூலாக காணப்படும் டோனி, நேற்றைய போட்டியில் இப்படி கோபமடைந்ததால், ரசிகர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் இப்படி போட்டியின் விதிமுறையை மீறிய டோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. டோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைகளின்படி ஆர்ட்டிகிள் 2.20 என்பது, போட்டியின் ஸ்பிரிட்டுக்கு எதிராகச் செயல்படுவது குற்றம் என்றுள்ளது.
அதில் குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் என்பதுதான் டோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தோனி லெவெல் 2 விதிமீறலை முதல்முறை செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, டோனிக்கு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. டோனி செய்தது தவறு என்றால் நடுவர் செய்தது தவறில்லையா எனப் பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கள நடுவர்களின் முடிவுகள் இந்தத் தொடரில் தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது. பெங்களுரூ – மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது. கடைசிப் பந்தில் பெங்களூர் வெற்றிபெற 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.