பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இதில் மக்கள் இசையை முன்நிறுத்தி வெற்றிபெற்றவர் செந்தில் கணேஷ்.இவர்கள் நிகழ்ச்சி மேடையில் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. செந்தில் கணேஷ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடுவார் என்று பார்த்தால் டி.இமான் இசையில் பாட கமிட்டாகி இருந்தார்.இதைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் சார்ளி சாப்ளின் 2ம் பாகம் தயாராகி வருகிறது.
அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி இருவரும் சின்ன மச்சான், செவத்த மச்சான் என்ற பாடலை அவரது இசையில் படத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.இவருக்கு அதிஷ்டம் குவிவதை போல வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அவர் ஓய்வின்றி இலட்சிய பாதையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்.இதேவேளை, செந்தில் கணேஷ் நேரம் கிடைக்கும் போது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவார்.
தற்போதும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டப்மாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.