வீட்டில் யாரும் இல்ல நேரத்தில் காதலியின் தாயாரிடம் விபரீதத்தில் ஈடுபட்ட பேஸ்புக் காதலர்..! என்ன நடந்தது தெரியுமா?

மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில் பணியாற்றி வருகிறார் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தில் குளத்துப்புழ பகுதியில் குடியிருந்து வருபவர் மேரிக்குட்டி. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் பார்சல் சேவை என கூறி இளைஞர் ஒருவர் மேரிக்குட்டியை அணுகியுள்ளார். வீட்டுக்குள் புகுந்த அவர், திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரிக்குட்டியின் வலப்பக்க மார்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மேரிக்குட்டி உயிர் தப்பிக்கும் பொருட்டு வீட்டுக்கு வெளியே ஓடியுள்ளார்.

பின்னர் சாலையோரத்தில் குழந்து விழுந்துள்ளார். கணவர் ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வருகிறார், இளைய மகள் லின்ஸா பெங்களூருவில் கல்வி பயின்று வருகிறார்.இதனால் சம்பவத்தின்போது குடியிருப்பில் எவருமே இல்லை என கூறப்படுகிறது.இதனிடையே அப்பகுதி மக்கள் மேரிக்குட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். மும்பையில் செவிலியராக படித்துவரும் லிஸா, பேஸ்புக் வழியாக குறித்த இளைஞருக்கு அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதனிடையே திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்த இளைஞரிடம், தமது குடும்பத்தாரின் ஒப்புதல்படியே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக குறித்த இளைஞர் லிஸாவை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆத்திரம் கொண்ட இளைஞர் தமது காதலியை கொலை செய்யும் நோக்கத்தில் கேரளா சென்றுள்ளார். லிஸாவை தமக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மேரிக்குட்டி எதிர்பாராத நிலையில் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பொலிசில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.