ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்து வந்துள்ளார்.விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி மாயமாகியுள்ளார்.
இதையடுத்து தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர்கள் இருவரை மீட்டு ஏர்வாடி காவல்நிலையத்திற்க்கு கொண்டு வந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.பெண்ணோ என் கணவருடன் வாழ விருப்பமில்லை. நான் என்னுடைய பெற்றோருடன் சென்றால் கொன்றுவிடுவார்கள், நான் காதலனுடன் தான் செல்வேன் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர், காவல்துறையினர் நளாயினியை அவரது கள்ள காதலனுடன் அனுப்பி வைத்தனர். அதையடுத்து பெண்வீட்டார் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதற்கு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன், பெண்ணிற்கு வயது 22 ஆகிறது.
அவர் யாருடன் செல்ல வேண்டும் என்று விரும்பிகிறாரோ அவருடன் தான் நாங்கள் அனுப்ப முடியும். நீதிமன்றமே கள்ளகாதலுக்கு தடையில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது. நான் என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்