வைரமுத்து சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா பேசியுள்ளார்.பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்தார் என பாடகி சின்மயி புகார் தெரிவித்தார்.இதோடு வைரமுத்து மீது சில பெண்கள் கூறிய பாலியல் புகார் தொடர்பான பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டு சின்மயி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், அவ்வளவு பெரியவர் பற்றி எப்படி நான் சொல்வது. வைரமுத்து அப்படி இப்படி நடப்பது சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.சுமார் 3 பேர் இதுபற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் ரகுமானிற்கு இது தெரியாது. சின்மயி சர்ச்சை ஏற்படுத்திய பிறகு ரகுமான் என்னிடம் இது உண்மையா? என கேட்டார் என ரைஹானா கூறியுள்ளார்.