அந்த காட்சிகளையும் நான் பார்த்தேன்: திருடனின் பகீர் வாக்குமூலம்

சென்னையில் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்படாமல் ஜன்னல் வழியாகப் பீரோவை இழுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.நாகமணி என்ற பீரோ புல்லிங் திருடனை பொலிசார் பிடித்தனர். இவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, என்.ஆர்.பேட்டையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் பீரோ புல்லிங் கொள்ளை தொழிலை செய்துவந்துள்ளான்,இதனால் இவர் மீது பல வழக்குகள் பதிவாகின.

நாகமணி திருடும் முறை குறித்து பொலிசார் கூறியதாவது, வீடுகளின் பூட்டை உடைக்காமல் ஜன்னல் வழியாகத்தான் நாகமணி கைவரிசை காட்டுவார். கொள்ளையடிக்கச் செல்லும் வீடுகளை முதலில் அவர் நோட்டமிடுவார்.வீட்டில் எந்த அறையில் பீரோ இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்வார். பிறகு, இரவில் அந்த அறையின் ஜன்னலைத் திறந்து கம்பி வழியாகப் பீரோவை சத்தமில்லாமல் ஜன்னல் இருக்கும் பகுதிக்கு இழுப்பார். அதன்பிறகு பீரோவை திறந்து நகை, பணம், பட்டுப்புடவைகள் என ஒன்று விடாமல் திருடுவார். வீட்டுக்குள்ளேயே செல்லாமல் திருடுவதில் கைதேர்ந்தவர் நாகமணி.

பீரோ புல்லிங் வழக்குகள் மட்டுமே 70 இருக்கும். இதுதவிர மற்ற திருட்டு வழக்குகள் 20 என மொத்தம் 90 வழக்குகள் நாகமணி மீது உள்ளன. 4 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நாகமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கமாக வீடுகளில் பீரோ படுக்கை அறையில்தான் இருக்கும். அந்த அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து பீரோ இழுத்துத் திருடும் நாகமணி, அந்த அறையில் இருப்பவர்கள் ஜாலியாக இருக்கும் காட்சிகளையும் பார்த்துள்ளதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.