அன்று கீர்த்தி! இன்று ஒரு அப்பாவி பெண்! இளம் பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறாரா சதீஷ்?

காமெடி நடிகர் சதீஷ் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சதீஷ் தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் படம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்பு இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையில் புகழ் பெற்றார். இதுமட்டுமில்லாமல் தாண்டவம், வத்திகுச்சி, மான்கராத்தே, சிகரம்தொடு, கத்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்தனர். இந்த திரைப்படத்தில் காமெடி நடிகனாக சதீஷ் வலம் வருவார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் சதீஷும் கீர்த்தி சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது .இந்நிலையில் நடிகர் சதீஷ் நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாக கூறப்பட்டது . கீர்த்தியும் இவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது . ஆனால் அவை அனைத்தும் பொய் என சிறிது காலம் கழித்து தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம் என இயக்குனர் முத்தையா சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் இதற்க்கு பதிலளித்த சதிஷ் வைபவ் மற்றும் சதீஷ் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாகவும். அதை காமெடிக்காக வெளியிட யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்

இந்நிலையில் தற்போது மீண்டும் சதீஷ் வேற ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளதா ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ? எனவும் சதீசை கண்டபடி திட்டி வருகின்றனர்.