அம்மாவின் குரலை முதன் முறையாக கேட்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய காது கேளாத குழந்தை.. பார்வையாளர்களை நெகிழ வைத்த காட்சி..

காது கேளாத குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை முதல் முறை தொழிநுட்ப உதவியுடன் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் ஊடாக தனது தாயின் குரலை கேட்டு புன்னகைக்கின்றது.

நம் உடலின் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் காதுகள் மிகவும் முக்கியமானவை. முதன் முறையாக அனைத்து சத்தங்களையும் உணரும் போது குழந்தையின் வெளிப்பாடு கண்ணீராகவே இருக்கின்றது.

இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த நெகிழ்ச்சியான காட்சியை பல மில்லின் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.