அம்மாவோட நினைவு வாட்டுது! நடிகர் சிவகார்த்திகேயன் செய்த நெகிழ்ச்சி செயல்… இதுதான் பாசம் என கூறும் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு குறித்து, போற்றத் தக்க வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னுடைய தாய்க்கு பிரசவம் பார்த்த சிங்கம்புணரி டாக்டர் சின்னய்யாவை நேரில் சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார் நடிகர் சிவ கார்த்திகேயன். தொடர்ந்து தன்னுடைய தாயாரின் சொந்த ஊரான பிரான் மலைக்கும் சென்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அங்கு, தன்னுடைய தாயாருடன் பழகியவர்களையெல்லாம் சந்தித்துப் பேசி இருக்கிறார்.