அம்மா, அப்பாவுக்கு மரண பயத்தை காட்டத்தான் அப்படி செஞ்சோம்..!!வாட்ஸ்ஆப் குரூப் மூலம் விபரீத செயல்..!! சிக்கிய 4 மாணவிகள்..!!

சென்னையில் தற்போது ஒரு வித்தியாசமான நிகழ்வு ஒன்று .அரங்கேறியுள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே பட்டாபிராம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் திங்கட்கிழமையன்று பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். பள்ளி முடிந்து நேரமான பிறகும் மாணவிகள் வீட்டிற்கு வராததை உணர்ந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவிகளை  தேடி வந்தனர்.  அப்பகுதியில் வசித்துவந்த மாணவிகளின் தோழிகளிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது இந்த மாணவிகள் “கேங்ஸ்டர் கேர்ள்ஸ்” எனப்படும் வாட்ஸ்அப் குழுவை தொடங்கி 4 பேரும் அதனுள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டு வந்துள்ளனர்.

மேலும் மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனை  எடுத்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த செல்போன் எண்ணை டிரேஸ் செய்ய போது, அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 21-ஆம் தேதி பிற்பகலில் வந்த செல்போன் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. சிக்னலை கண்டுபிடித்தபோது அவர்கள் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக காவல்துறையினர் தங்கள் குழுவை அனுப்பி மாணவிகளை  பிடித்துள்ளனர் . பின்னர் மாணவிகள் பட்டாபிராம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அதிகாரிகள் அவர்களிடம் திடீரென்று மாயமாவதற்கான காரணங்களை கேட்டறிந்தனர். அதற்கு அந்த மாணவிகள், “வீட்டில் பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பதால் இந்த முடிவை எடுத்தோம். எங்களால் அவர்களுடன் வாழ இயலாது” என்று கூறியுள்ளனர்.