அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஆனால்.? வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதா திருமண விடயத்தில் தான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததாக பொலிசில் புகார் அளித்த நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணமும் சர்ச்சைக்கு உள்ளானது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,நான் உண்மையில் நம்பிக்கையுடன் இருந்தேன், அவர் இந்த உறவில் நன்றாக நிலைத்திருப்பார், அவர் கடினமான காலங்களை கடந்துவிட்டார். வருத்தமாக இருக்கிறது அவருடைய அனுபவங்களைப் பற்றி குரல் கொடுத்தார். அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினர், ஆனால் அவர் இந்த பகுதியை கவனிக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த நடிகை வனிதா உங்களின் வேலையை பாருங்கள். குடும்ப பிரச்சினைகளை அவர்களின் அனுமதியின்றி விவாதிப்பதை நிறுத்துங்கள் என காட்டமாக பதிலடி கொடுத்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விடயத்தில் நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால், மறுமணம் செய்யும் யாராக இருந்தாலும், முறைப்படி அதற்கு முந்திய திருமணத்தை விவாகரத்து செய்திருக்க வேண்டும். படித்த சிலரே இதைப்பற்றி அறியாமல் உள்ளார்கள் அவர்களுக்கும் இதனை தெரிவிக்க ஆசைப்படுகிறேன் என வனிதாவை மறைமுகமாக சாடியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.