என்னது..? உல்லாச கப்பல்களில் பி ண வறை, ர கசிய சி றை இருக்குமா..? – கப்பலின் அதிர வைக்கும் விஷயங்களை தற்போது காணலாம்..!

பொதுவாக விடுமுறை நாட்கள் என்றால் அதனை உற்சாகமாக வெளியே சென்று கழிப்பதற்கு தான் பலரும் விரும்புவார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக விடுமுறை தினங்கள் செல்வதில்லை. ஆனால், பண வசதி படைத்தவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டம் என்பதே வார்த்தையால் சொல்ல முடியாத நிகழ்வாகும். அவ்வாறு மிதக்கும் சொர்க்கம் என்று வர் ணிக்கப்படும் உல்லாச கப்பலின் அதிர வைக்கும் மறுப்பக்கத்தினையே தற்போது காணலாம்.

அவ்வாறு நடுத்தர வர்க்கத்தினரின் கனவாகவும், ஆசையாகவும் இருந்து வரும் இந்த கப்பலின் இப்படியொரு  ரகசியம் உள்ளதா..? என்ற கேள்வி நிச்சயம் இதனை வாசித்தால் நம்மில் அனைவருக்கும் எழும்.

பி ண வறை:  பெரும்பாலான உல்லாசக் கப்பலில் பி ண வறை இருப்பது உண்மையே. இள வயதினரைக் காட்டிலும் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பயணிப்பதால், அவர்களின் மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழும் என்பதால் அவர்களின் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு பி ண வறை இருக்கின்றதாம். ஒவ்வொரு ஆண்டிற்கும் உல்லாச கப்பல்களில் 220 பேர் மரணிப்பதாக கூறப்படுகின்றது. இந்த கப்பலில் பயணிப்பவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் உடனே ஹெலிகப்டரில் கூட மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார்களாம்.

ஜெ யி ல்: உல்லாச கப்பலில் ஜெயிலும் உள்ளது. இதில் பயணிப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனை மீறினாலோ, மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் ரகளை செய்தாலே சிறையில் போட்டுவிடுவார்களாம். உல்லாச கப்பலின் கீழ் தளங்களில் சிறிய அறையினை இதற்கு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு சி றையில் அடைக்கப்பட்டவர்கள் அடுத்த துறைமுகத்திற்கு செல்லும் போது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் அல்லது பயணம் முடியும் வரை சிறையில் வைக்கப்படுவார்களாம்.

சமையலறை: உல்லாச கப்பல்களின் சமையல் அறை மிகவும் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீல்ஸ்களை உல்லாச கப்பல் பணியாளர்கள் பரிமாறுகின்றனர். ஒரு உல்லாச கப்பலில் வெறும் 7 நாட்களில் 100 டன் உணவு பரிமாறப்படுகிறது. உல்லாச கப்பல்களில் பயணிகள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். எனவேதான் சமையல் அறை பெரிதாக ஏற்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் பயணம் செய்யும் ஒரு உல்லாச கப்பலில், 3.5 டன் அரிசி, 5.5 டன் மாவு, 31 டன் காய்கறிகள், 8 டன் சிக்கன் மற்றும் 15.8 டன் ஆயில் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

உணவு:  உல்லாச கப்பல்களில் பரிமாறப்படும் உணவு உண்மையில் நம்ப முடியாத அளவிற்கு சுவையாக இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடும் உணர்வு உங்களுக்கு ஒவ்வொரு நாளும் நிச்சயம் ஏற்படும். 3 வேளை உணவிற்கான செலவு டிக்கெட் கட்டணத்திலேயே அடங்கி விடும். அது மட்டுமின்றி வெளியே தனியாக உணவுவிடுதிகளும் உண்டு. இதற்கு நமது கையிலிருந்து பணத்தினைக் கொடுத்து சாப்பிட வேண்டுமாம்.

நாள்காட்டி: விடுமுறையில் கப்பலில் பயணிக்கும் போது என்ன கிழமை என்று பயணிகள் மறந்துவிடுவார்கள் என்பதற்கு தினமும் காலை எலவேட்டர்களில் இருக்கும் ஃப்ளோர் டைல்ஸ் மாற்றப்படுமாம்.

மிருகங்கள் வடிவில் டவல்: வெளியிடங்களில் துப்புறவு தொழிலாளர்கள் இருப்பது போன்று இந்த கப்பலிலும் படுக்கையறையினை துப்புறவு செய்வதற்கும், மற்ற இடங்களை துப்புறவு செய்வதற்கும் நபர்கள் இருப்பார்கள். சில தருணங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை படுக்கை விரிப்பு மாற்றப்படுமாம். சில வேலை செய்யும் நபர்கள் மிகவும் வித்தியாசமாக படுக்கை விரிப்பினை மிருகங்கள் போன்று செய்து வைத்து பயணிகளை அசத்துவார்களாம்.