பிக்பாஸ் வீட்டில் நேற்றைய லக்ஜ்ரி பட்ஜெட் டாஸ்கில் போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க்கை அற்புதமாக போட்டியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சற்றுமுன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் லொஸ்லியா எனக்கும் கவினுக்கும் நல்ல நட்பு மட்டும் தான் இருக்குன்ணு எங்களுக்கு தெரியும்.
நான் யாருக்கும் சொல்லவேண்டும் அவசியம் இல்லை. என்றார். இதற்கு சாக்ஷி பதிலடி கொடுக்க, கோபப்பட்ட லொஸ்லியா உன்கிட்ட நான் தனியா சொல்லணும் அவசியம் இல்லை என்று பேசிவிட்டு சென்றார்.