என்ன ஆச்சர்யம்! கொரோனா பயத்தால் ரூ. 25 ஆயிரத்தை எடுக்காத மக்கள்…

உலகம் முழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அரசு பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும். ஒரு சில சுவாரசியமான, ஆச்சர்யமான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது பாக்கெட்டில் இருந்து, அவருக்கே தெரியாமல், ரூ.25 ஆயிரம் பணக்கட்டு கீழே விழுந்துள்ளது. ஆனால் அதை அவர் கவனிக்காமல் கடைக்குச் சென்றுள்ளார். நீண்ட தோற்றம் சென்ற பிறகு தான் அவர் இதனை கவனித்தார். தன்னுடைய பாக்கெட்டில் பணம் இல்லை என்பதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்.

ரோட்டில் கிடந்த பணத்தை மக்கள் யாரும் அதை எடுக்கவில்லை. கொரோனா காரணமாக பயத்தில் எடுக்காமல் விட்டுள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்து பணத்தை கைப்பற்றியுள்ளனர். அதற்க்கு பிறகு கைப்பற்றப்பட்ட அந்த பணத்தை விசாரணை செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர் காவல் துறையினர்.

சாதாரணமான சூழலாக இது இருந்தால் மக்கள் யாரோ அந்த பணத்தை எடுத்து சென்றிருக்கலாம். ஆனால கொரோனா நேரம் என்பதால் பயத்தால் மக்கள் யாரும் அந்த பணத்தை எடுக்காதது எல்லோருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.