கடலூரில் பெரும் பராபரை ஏற்படுத்த கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. கடலூர் மாவட்டத்தில் ஒதியடிகுப்பம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அருள் என்ற 38 வயது நபர் வசித்து வருகிறார். இவர் காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். 4 மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேஸ்வரியின் வயது 30. இருவரும் ஒன்றாக சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள காவல்துறையினர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இதனிடையே நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் ராஜேஸ்வரி கயிற்றில் தொங்கியுள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராஜேஸ்வரியின் தம்பியின் பெயர் சரவணன். இவர் சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “20-ஆம் தேதியன்று என்னுடைய சகோதரி என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது அருள் மற்றும் அவரது அண்ணி தன்னை கஷ்ட்டப்படுத்துவதாக கூறினார். மேலும் அருள் தன்னுடைய அண்ணி வெண்ணிலாவுடன் தொடர்பு ஈடுபட்டு வந்தார் என்றும், அதன் காரணமாக என்னுடைய சகோதரியை கஷ்ட்டப்படுத்துவதாக கூறியுள்ளார். அண்ணியின் ஆபாச புகைப்படங்களை செல்ஃபோனில் வைத்துக்கொண்டு அவருடைய அழகை ரசித்துக்கொண்டு என் சகோதரியை கஷ்ட்டப்படுத்துவதாக கூறியுள்ளார். இத்தனை கஷ்ட்டங்களையும் தாங்கிக் இயலாமல் என்னுடைய சகோதரி தவறான முடிவை தேடிக்கொண்டார் .

என்னுடைய சகோதரியின் மரணத்திற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.