எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தேன்… கடவுள் வேற மாதிரி நினைச்சிருக்காரு… அழகான, இளமையான அம்மாவாக கலக்கும் நடிகை ஸ்ரீரஞ்சினி உருக்கம்

மொழி, அலைப்பாயுதே போன்ற படங்களில் அம்மா, அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீரஞ்சினி தனது சினிமா வாழ்க்கையை நம்முடன் பகிர்கிறார்.. நான் என்ன புரிஞ்சிகிட்டேன்னா, நான் ஒரு நடிகை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவா மாறிடனும். அதுல என்னோட திறமையை நான் காட்டனும்கிறதுதான். அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சரி. அது ஒரு சாதாரண கெஸ்ட் ரோலா இருந்தாலும் சரி, நம்மளோட பெஸ்ட் டேலண்ட்டை நாம் கொடுக்கணும் என்றார் ஸ்ரீரஞ்சினி சினிமா, டிவி சீரியல்களில் அம்மா, அக்காவாக நடிக்கும் ஸ்ரீரஞ்சினி ஸ்ரீரஞ்சனி தன்னுடைய சினிமா மற்றும் டிவி சீரியல் அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.


நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான். இங்கிலீஷ்லயே பேசி வளர்ந்துட்டோமா, அதனால் எனக்கு அவ்வளவா தமிழ் வராது. சென்னைக்கு வந்த புதுசுல சுத்தமா தமிழ் தெரியாது. அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேச கத்துக்கிட்டேன். சில பேர்களின் முகங்கள் என்னதான் வசீகரமாகவும் தெய்வாம்சத்துடன் இருந்தாலும் சில குறிப்பிட்ட கேரக்டர்களுக்கு தான் பொருத்தமாக இருப்பார்கள். சில பேர் என்னதான் அழகாகவும், இளமையாக இருந்தாலும் வயதான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் லாயக்கு என்று முத்திரை குத்திவிடுவார்கள். தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடக்கும் கூத்து இது.

ஸ்ரீரஞ்சனி முதன் முதலில் அலைபாயுதே படத்தில் நடிகர் மாதவனுக்கு அண்ணியாக நடித்தார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டுகொண்டது அந்நியன் படத்தில் நடிகை சதாவின் அம்மாவாக நடித்த போதுதான். அப்போதிருந்து இவருக்கு தொடர்ந்து அம்மா, அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களே வந்து கொண்டிருக்கின்றன. நல்ல நடிப்புத் திறமை இருப்பதால், வில்லியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்று சொல்லும் ஸ்ரீரஞ்சனிக்கு யாரும் வில்லி கேரக்டர் கொடுக்க தயாராக இல்லை. ஒருவேளை அதுக்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டார் என்று நினைத்துவிட்டார்கள் போல.

நான் முதன் முதலில் நடிகர் மாதவனுக்கு அண்ணியாக நடித்தேன். அதோடு தொடர்ந்து அவருக்கு மூன்று படங்களில் நடித்ததால், எல்லோருமே என்னை உண்மையிலேயே நடிகர் மாதவனுடைய அண்ணி என்று நினைத்துவிட்டனர். ஏன்னா, எனக்கு ஆரம்பத்துல சுத்தமா தமிழ் தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான். இங்கிலீஷ்லயே பேசி வளர்ந்துட்டோமா, அதனால் எனக்கு அவ்வளவா தமிழ் வராது. ரொம்ப சமீபத்துலதான் சென்னைக்கு வந்தேன். வந்த புதுசுல சுத்தமா தமிழ் தெரியாது. அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேச கத்துக்கிட்டேன். நான் எப்பவுமே வர்ற கேரக்டர்களை எடுத்து பண்றேன். ஏன்னா நான் ஆரம்பத்துலே பாலச்சந்தர் சார் யூனிட்ல் இருந்தேன்.

அதுவே எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். அதெல்லாம் எனக்கு ஒரு வரம். ஒண்ணுமே தெரியாம மகா மக்கு பிளாஸ்திரியா தான் அங்கே இருந்தேன். ஆனால் எனக்குள்ள இருந்த டேலண்ட்டை பாலச்சந்தர் சார் கண்டுபிடிச்சி வெளிய கொண்டுவந்தார். நான் ஒரு நடிகை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவா மாறிடனும். அதுல என்னோட திறமையை நான் காட்டணும்கிறதுதான். அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சரி. அது ஒரு சாதாரண கெஸ்ட் ரோலா இருந்தாலும் சரி, நம்மளோட பெஸ்ட் டேலண்ட்டை நாம் கொடுக்கணும் என்பதை நான் புரிஞ்சிகிட்டேன் என்கிறார் ஸ்ரீரஞ்சினி.