24 பெண்களுடன் உல்லாசம்..!! ரகசிய வீடியோ பதிவு..!! அதிரவைத்த போலீஸ் எஸ்.ஐ வாக்குமூலம்

சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி செய்த டுபாக்கூர்’ போலீஸ் எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் 20க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளார் எனவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என, அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து பொலிசார் தனிப்படை அமைத்து அப்பெண்ணை தீவிரமாக தேடினர். விசாரணையில் அந்த இளம்பெண் அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த, ராஜேஷ் பிரித்வி (29) என்பவரால், திருப்பூருக்கு கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூருக்கு சென்ற பொலிசார் அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த, இளம்பெண்ணை மீட்டு, 9ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருந்த, ராஜேஷ் பிரித்வியை தேடி வந்தனர். நேற்று மதியம் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற, ராஜேஷ் பிரித்வி, தன்னுடன் வருமாறு அவரை அழைத்து மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த பொலிசார் அங்கு சென்று ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். அவரிடம் இருந்து, பொலிஸ் எஸ்.ஐ., சீருடை, போலி அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் கார்டு, வாக்காளர் அட்டை, கைவிலங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பொலிசில் ராஜேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம். 7ம் வகுப்பு படித்துள்ளேன். 2014ல், சென்னைக்கு வந்து, ஹொட்டலில் வேலை பார்த்தேன். இளம்பெண்களுக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து நகை, பணம் பறித்து சொகுசாக வாழ வேண்டும் என திட்டம் தீட்டினேன். அதற்காக பேஸ்புக்கில் பொலிஸ் சீருடை அணிந்த என் படங்களை வெளியிட்டேன். அதை நம்பிய இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்தேன். மேலும், ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் வாயிலாக, பெண்களுக்கு திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து, அவர்களிடமும், இதே பாணியில், பணம், நகை பறித்தேன்.

ஒரு பெண்ணுடன், நான்கு நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்துவேன். பின், வீடியோக்களை,
சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியே, அவர்களை கழற்றி விடுவேன். 2016ல், ஆந்திர மாநிலம், திருப்பதி, காளஹஸ்தியைச் சேர்ந்த, மூன்று இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி, கணவன், மனைவி போல நெருக்கமாக இருந்து, நகை, பணம் அபகரித்தேன். இது குறித்த புகாரில் ஆந்திர பொலிசார் என்னை கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி ஒட்டம் பிடித்தேன். மோசடி செய்த பணத்தில் சென்னை அமைந்தகரையில் சுய தொழில் துவங்குவதற்கு கவுன்சிலிங் அளிக்கும் நிறுவனம் துவக்கினேன்.

வாடிக்கையாளர்களின் மகன், மகள்களுக்கு, பிரபல கல்லுாரிகளில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தேன். மேலும், என் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண்களை, ரகசியமாக படம் எடுத்து, அவர்களின் அழகை வர்ணித்து, என் இச்சையை தீர்த்துக்கொண்டேன். இதுபோல, 24 இளம்பெண்களுடன் கடத்தி உல்லாசம் அனுபவித்துள்ளேன். என் மீது, திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் ஆந்திர மாநில காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என கூறி அதிரவைத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.