ஆந்திராவில் உள்ள அடிகாவி நன்னய பல்கலைக்கழகத்தில் (Adikavi Nannaya University) ஆங்கில பாடப் பிரிவுக்கான ஹெச்ஓடி பணிபுரியும் சூர்யா ராகவேந்திரா என்பவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை அவ்வப்போது, வீட்டிற்கு தனியாக அழைத்து சில்மிஷம் செய்வதை வாடிக்கையாகச் செய்து வந்துள்ளார்.

இதன்பேரில், மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து, ஆந்திர முதல்வரின் அலுவலகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், முதல்கட்ட விசாரணையில், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என, தெரியவந்துள்ளதாகவும், போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தங்களது கல்லூரி ஹெச்ஓடி மீது கூறப்படும் புகாரை, அடிகாவி நன்னய பல்கலைக்கழக துணை வேந்தர் சுரேஷ் வர்மா மறுத்துள்ளார். தங்களது கல்வி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில விஷமிகள் இச்செயலை செய்துள்ளதாக, அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
