தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ் (36) என்பவர் வசித்து வந்தார். போதைக்கு அடிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் தினமும் சேர்ந்து குடித்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போதையில் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்த ரமணா அவரின் செயினை கழட்டி தரும் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்த நிலையில் சீதாலட்சுமியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக தோன்றிய நிலையில் பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் ரமணாவிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
