கனடாவில் தமிழ் தம்பதிக்கு கிடைத்துள்ள கெளரவம்..! – குவியும் பாராட்டுக்கள்..! – அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா..?

தமிழகத்தை சேர்ந்த தம்பதி கொரோனா பேரிடர் காலத்தில் கனடாவில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் கனடா நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செட்டிநாட்டை பூர்வீகமாக கொண்டு, மதுரையில் பிறந்தவர் வள்ளிக்கண்ணன் மருதப்பன். இவர் கனடாவின் பதிவு செய்த லாப நோக்கமற்ற கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாக இருந்து வருகிறார்.

வள்ளிக்கண்ணன் கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக youtube நிகழ்ச்சி செய்து பண உதவி செய்துள்ளார்.

அதே போல வள்ளிக்கண்ணன் மனைவி பார்வதி அங்கு ஊரடங்கு காலத்தில் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளிக்கண்ணன் மற்றும் பார்வதியின் சமுதாயப் பணி, சேவை மனப்பான்மையை கெளரவிக்கும் வகையில் STA EVENTS மற்றும் SUPREME GROUP OF COMPANYS KUWAIT இணைந்து கனடா நாட்டின் Real HEROES of COVID 19 என்னும் விருது வழங்கி பாராட்டி கெளரவித்துள்ளது.