கருப்பன் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த கதாநாயகியா இது ?? – வெளியான புகைப்படங்களால் அதிர்ந்துபோன ரசிகர்கள்

இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர், பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தான்யாவிற்கு இளம் வயதில் இருந்து அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது தாயார், லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார்.

இதனால் தான்யா மற்றும் அவரது சகோதரி அபராஜிதா ஆகிய இருவரையும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். சகோதரிகள் இருவரும் சென்னையில் தங்களின் பதின் வயதுகளின் போது பல மேடைகளில் தங்கள் பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளனர். அவர் திரைப்படத் துறையில், நுழைவதற்கு முன்னதாக இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னையில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்ஸ் கல்லுாரியில் முதுகலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார்.

2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தான்யா முதலில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார். இத்திரைப்படத்தில் சக அறிமுக நடிகர் மைத்ரேயனுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். மிஷ்கின் அவரது இயற்பெயரான அபிராமியை தனது தொழில் வாழ்க்கைக்காக தான்யா என மாற்றுமாறு கோரினார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.அன்று முதல், தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு அழைக்கப்படுகிறார்.

விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த “கருப்பன்” திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. குடும்பப்பாங்காக நடித்து வரும் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.இவற்றை பார்த்த ரசிகர்கள். கருப்பன் பட நடிகை தன்யா-வா இது..? என ஷாக் ஆகி வருகிறார்கள்.