சீரியல்களில் நடித்து பிரபலமாகி, தற்போது நடிகர் கார்த்திக்கு அக்காவாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நன்கு அறியப்பட்டிருக்கிறவர் நடிகை தீபா. இவருக்கு இந்த பெயர் வர காரணம், தீபாவளி தினத்தில் பிறந்தாராம். அதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீபா என்று பெயர் வைத்து விட்டதாக கூறுகிறார். மேலும் பெயர் எந்த அளவிற்கு, பிரகாசமாக உள்ளதோ.. அதே போல் தன் வாழ்க்கை இல்லை , காரணம் பள்ளி பருவத்தில் இருந்தே நிறத்தை சுட்டி காட்டி சக மாணவர்கள் முதல், ஆசிரியர்கள் வரை இவரை புறக்கணித்து உள்ளார்களாம். இதனால் டான்ஸ் போன்ற கலைகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் இவர் பங்கேற்றது இல்லை.

ஒரு நிலையில் தன்னை ஒதுக்கி வைக்கும் பள்ளிக்கூட படிப்பு தனக்கு தேவை இல்லை என, 11 ஆம் வகுப்பிலேயே தன்னுடைய படிப்பை நிறுத்தி கொண்டார். இதுவரை சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே முகம் காட்டி வந்த இவர், தன்னுடைய திறமையின் மூலம் தற்போது பெரிய படஜெட் படங்களிலும் தலைகாட்ட துவங்கியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்ததாக நடிகர் பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சாதிக்க, விடாமுயற்சியும், திறமையும் இருந்தால் போதும் அழகு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார் இந்த கருப்பு அழகி, மேலும் கருப்பா பொறந்தது என் குத்தாம என தன்னை கருமை என்று ஓதிக்கியவர்களை நோக்கி ஒரு கேள்வியும் வைத்துள்ளார்.