கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஆண்ட்ரியா…? அவர் புத்தகத்தில் எழுதியது உண்மையா…?

தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பாடகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ஆண்ட்ரியா. அதன் பின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடித்தாலும் தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டும் அல்லாமல் போட்டோஷூட் எடுப்பது, வெப் சீரிஸில் நடிப்பது என்று எப்போதும் பிஸியாகவே இருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தரமணி, மற்றும் வட சென்னை போன்ற படங்கள் நிறைய விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். அவரே வெளியிட்ட புகைப்படம்…!