கலவரத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கூடுவார்கள்.

எனவே விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கு நள்ளிரவு 1 மணி வரையே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவிலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யவில்லை என்றும், அங்கு கொடுக்கப்பட்ட உணவு பொருள்கள் சரியாக இல்லை என்றும் இளைஞர்கள் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால், குறித்த பொழுதுபோக்கு பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைராலாக பரவி வருகிறது.