காதலனுக்காக பெற்ற தாயை கூலிப் படை ஏவி கொலை செய்த மகள்! – காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவீங்க

தமிழகத்தில் பேஸ்புக் காதலனுக்காக தாயை கூலிப்படை ஏவு கொலை செய்த கல்லூரி மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், ஆஞ்சனேய புரத்தை சேர்ந்த தம்பதி திருமுருகன் – பானுமதி. இவர்களுக்கு தேவிபிரியா(19) என்ற இளையமகள் உள்ளார்.இவர் ஆவடியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கையில் எப்போதும் செல்போனுடனே இருக்கும், தன் நண்பர்களிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட அவரது தாய் கண்டித்துள்ளார். அப்போது தான் மைசூரில் பணி புரிந்துவருவதாகவும், கும்பகோணத்தை சேர்ந்தவர் என்றும் விவேக் என்ற இளைஞன் பேஸ்புக் அவருக்கு நண்பனாகியுள்ளான்.

இருவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் பேசி வந்ததால், அவரை நேரில் பார்க்காமலே தேவிபிரியா அந்த நபரை காதலித்துள்ளார். இதனால் இது குறித்து தன் தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ, அப்படிப்பட்ட பசங்களை நம்பாதே என்று செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். அதன் பின் ஒரு வழியாக அழுது பிடித்து செல்போனை வாங்கி, மீண்டும் காதலனுடன் பேசத் துவங்கியுள்ளார்.தனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததுள்ளதாக காதலனிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். காதலுக்கு தாயார் தடையாக இருப்பதால், விவேக்குடன் சேர்ந்து தேவிபிரியா அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கும்பகோணத்தில் இருந்து காதலன் விவேக்கால் அனுப்பிவைக்கப்பட்ட கூலிப்படையை சேர்ந்த இருவர் காக்களூர் வந்து தேவிபிரியாவை சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது தாயை இருவருக்கும் அடையாளம் காட்டி உள்ளார்.இதனை பார்த்த தாய் பானுமதியிடம் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் என கூறி தேவிபிரியா சமாளித்துள்ளார்.

வீட்டில் அவரது சகோதரி இருந்ததால் உடனடியாக தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் காத்திருந்துள்ளனர்.சிறிது நேரத்தில் வீட்டில் ஓய்வெடுக்க சகோதரி படுக்க அறைக்கு சென்று விட வீட்டின் ஹாலில் பானுமதி தனியாக அமர்ந்திருந்தார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன் வாசலில் புகுந்த கூலிப்படையைச் சேர்ந்த இருவர் பானுமதியை கொலை செய்ய முயற்சித்த போது கத்தியுள்ளார்.

அப்போது கூட பெற்ற தாய் என்று பார்க்காமல், காதல் கண்ணை மறைத்துள்ளது. தேவிப்பிரியா தாய் பானுமதியின் கழுத்தை நெரித்துள்ளார்.அவரே அங்கிருக்கும் கத்தி ஒன்றை கூலிப்படையினருக்கு எடுத்து கொடுக்க, அவர்கள் பானுமதியை சரமாரியாக கத்தியால் குத்தினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தேவிப்பிரியாவின் சகோதரியையும் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டு சுவர் ஏறிக்குறித்து பின்பக்கமாக தப்பி ஓடியுள்ளனர்.வெளியூர் கூலிப்படையினர் என்பதால் ஊரை விட்டு வெளியேற வழி தெரியாமல், அங்கு கிரிக்கெட் விளையாண்ட இளைஞர்களிடம் வழி கேட்க கையில் ரத்தகறையுடன் இருந்ததால், அவர்களை பிடித்து அடித்து விசாரித்த போது கொலை செய்து விட்டு தப்பி வந்தது தெரியவந்தது.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பானுமதி பரிதாபமாக பலியானார். இதையடுத்து தேவிபிர்யா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.தேவிபிரியாவோ தனது தாயை கொலை செய்து விட்டோமே என்ற சிறு பதற்றமும் இல்லாமல் திமிராக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.