காப்பாற்றபட்டார் சாண்டி… யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷன்..! வெளியான அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ்ஸில் இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் எந்த போட்டியாளர் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். வோட்டிங் அடிப்படையில் செரின்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்கள் எப்படியும் ஒரு போட்டியாளரை ஷேவ் செய்வார். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளரான கவின் ஏன் வெளியேறினார் என்ற கேள்விக்கும் பதில் கண்டிப்பாக கிடைக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த நிலையில்

தற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஆரம்பத்தில் இருந்து கமல் கூறி வருவது போலவே இந்த வாரம் யாரும் எதிர்பாராத தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்த வெளியேற்றம் தற்போது 99 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான வெளியேற்றம் நாளை நடந்துவிடும்.இருப்பினும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.