காவலன் பட வடிவேலு ஜோடி நடிகை என்ன ஆனார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

சித்திக் இயக்கத்தில் 2011ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் காவலன். இப்படத்தில் விஜய்க்கு ஹிட் ஜோடி என்று ரசிகர்களால் கூறப்பட்ட அசின் அவர்கள் நடித்திருந்தார். வழக்கமான விஜய் படங்களை தாண்டி இப்படத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருந்தது.

அதிலும் படத்தில் வடிவேலுவின் காமெடிக்கு ரசிகர்களிடம் செம வரவேற்பு. இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை நீபா நடித்திருப்பார் வடிவேலுவின் முறைப் பெண்ணாக நடித்தவர் நீபா. கட்டுக்குலையாத அழகியாக இருந்த நிலையிலும் காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த காரணத்தினால் அதன் பிறகு திரையுலகம் நீபாவை கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார். அவர் கணவன், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. முதலில் பெண் குழந்தைக்கு தாயான நீபா இப்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.