மதுரையில் வசித்து வருபவர்கள் மணிமுத்து(29) மற்றும் சக்திகாளி(22) என்னும் தம்பதியினர். மணி முத்துவின் மனைவி சக்திகாளி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் மதுரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது சக்தி காளியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இரவு 8 மணிக்குள் குழந்தை பிறந்துவிடும் என்று கூறியிருக்கின்றனர் . அதனைக் கேட்ட மணிமுத்து தனக்கு குழந்தை பிறந்துவிடும் என்று சந்தோஷத்தில் இருந்திருக்கிறார். ஆனால் 8 மணிக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மிகவும் அச்சத்தில் இருந்த மணிமுத்து அங்கிருந்து செவிலியர்கள் இடம் மனைவியின் உடல்நிலை பற்றி கேட்டுள்ளார் .

அதற்கு அவர்கள் தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் . 9 மணிக்குள் குழந்தை பிறந்துவிடும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர் . இதனையடுத்து மணி ஒன்பதை தாண்டிய பின்பும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை . இதனை அடுத்து சந்தேகம் அடைந்த மணிமுத்து உள்ளே சென்று தன் மனைவியை பார்த்துள்ளார். அப்போது மருத்துவர்கள் இல்லாமல் வெறும் செவிலியர்கள் மட்டும் சூழ்ந்து நின்று தன் மனைவிக்கு சிகிச்சை அளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் மணிமுத்து . மிகுதியான உதிரப்போக்கு உடன் கிடந்துள்ளார் மணி முத்துவின் மனைவி சக்தி காளி.

உடனே அங்கிருந்த செவிலியர்கள் சக்தி காளி இறந்து விட்டதாக அவரது கணவரிடம் கூறி உள்ளனர் . இதனை நம்பாத மணிமுத்து தன் மனைவியை வேறொரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சக்தி காளி இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் மணிமுத்து மற்றும் சக்திகளை குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து மணிமுத்து மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவத்தை பார்த்ததால் தன் மனைவி இறந்து விட்டதாக கூறி புகார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
