பொதுவாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாழ்க்கை வாழ்வதென்பது வாழ்ந்து பார்த்தவர்களுக்கே தெரியும் என்பார்கள். பிச்சைகாரனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிகப் பெரிய பணக்கரனாக இருக்கவேண்டும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தால் போராட்டம் என்பது மரணம் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். மாதத்தில் முதல் நாட்களில் கறி சோறும் மாதகடைசியில் வயிற்றில் ஈர துணியும் கட்டும் கொடுமை மிடில் கிளாஸ் குடும்பங்களை மட்டுமே சேர்ந்ததாக இருக்கும். அன்றாடம் பிச்சை எடுப்போர் யாரோ உணவு போடுகிறார்கள் என்பதால் எந்த ஒரு கவலையும் இன்றி எத்தனை குழந்தைகளையும் பெற்று போடாலாம் என குழந்தை பெற்றுக்கொண்டிருக்க குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என தள்ளி வைக்கும் கொடுமை நிச்சயம் எம்மை சார்ந்ததே.
மேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க!! ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பமும் படும் அவதியையும் ஏக்கத்தையும் அதே நேரம் நடுத்தர குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சியையும் அழகாக குறும்படமாக கொடுத்திருகின்றார்கள்.இன்றைய அரசியலால் படும் அவஸ்த்தையில் அழகிய காதலையும் சேர்த்திருப்பது சிறப்பு..”மதன் எனக்கு குழந்தை பெத்துக்கனும் போல் ஆசையாக இருக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில் மனதை நெருட வைக்கிறார் ஹீரோயின். வாங்க பார்க்கலாம்..!!