தற்போது உலகம் முழுவதும் உள்ள நிலையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களின் நடிப்பும் பா திக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் அவர்களின் இயல்பான சூழல் மாறி உள்ளது என்று சொல்லலாம். இதனால் பல பிரபலங்கள் தற்போது தங்களது தொழிலை மாற்றி வருகின்றனர். காய்கறி விற்பது, மளிகைக்கடை வைப்பது, பழங்கள் விற்பது, மீன் விற்பது என பல்வேறு விதமான தொழிலில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ஶ்ரீநாத் வசிஸ்தா, செக்யூரிட்டியாக மாறி இருக்கின்றார். இவர், டாக்டர் சுகன்யா, மந்தனா உட்பட சில படங்களை இயக்கியுள்ளதோடு, பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் தற்போது செக்யூரிட்டியாக மாறியுள்ள அவர், பிபிஇ கிட் மற்றும் தெர்மல் ஸ்கேனருடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளில் ஒருவருக்கு கொரோனா பா திப்பு ஏற்பட்டுள்ளது.

அவருடன் இருந்த 3 செக்யூரிட்டிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் குடியிருப்பு சங்கம், செக்யூரிட்டியாக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது. எனது ஷிப்ட் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை. நேற்று என் மகன் செக்யூரிட்டியாக இருந்தான். இது எனக்கு புது அனுபவம் என்று கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான ஶ்ரீநாத் வசிஸ்தா.
