கோலாகலமாக நடந்த பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமணம்.. – வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி அசத்தியவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், அதில் பல்லவி என்பவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார். இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார்.

இவர் சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி வேற யாரும் இல்லைங்க அனிதா குப்புசாமி. இவருடைய மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து நிறைய மேடைகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார்கள். மேலும், இவர்கள் இருவருமே இணைந்து நிறைய நாட்டுப்புற பாடல்கள்,

இடம் கிராமியப் பாடல்களை எழுதி பாடி உள்ளார்கள். வெளிநாடுகளில் தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இவர்கள் தங்களுடைய இசை நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்கள். இந்நிலையில், அண்மையில் பல்லவிக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

சென்னையில் உள்ள லீலா பேலஸில் இவர்களது திருமணம் நடந்துள்ளது, என்பதாக கூறப்படுகின்றது. இதோ இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்…