சத்தம் இல்லாமல் சாதனை செய்தார் தல அஜித். தல என்ன செய்தார் தெரியுமா.

தமிழ் சினிமாவில் முக்கிய ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் தான் தல அஜித்குமார். பொதுவாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது.இருந்தாலும் எப்போதும் தல அஜித்க்கு மவுசு அதிகம் தான்.

இங்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய ஆளில்லா விமான கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.இந்த போட்டி அண்ணா பல்கலைக்கு ஒரு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த போட்டிக்கு அண்ணா பல்கலை மாணவர்களின் குழுவான ஒன்று தான் “தி ஷாக்” இந்த குழுவிற்கு ஆலோசகராக நடிகர் அஜித்குமாரை நியமித்தது அண்ணா பல்கலைக்கழகம்.

இது அவருக்கு ஒரு பெருமை சேர்க்கும் விசயமாக கருதப்பட்டது.ஆலோசகராக நியமித்த அஜித் அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் 1000 அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். பொதுவிசியங்களில் பெரிதும் பங்கு கொள்ளாத நடிகர் அஜித் அவர்கள் இதற்காக நேரம் ஒதுக்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி முடிவில் அவரது அணி முதல் பரிசை பெற்றது. பறக்கும் ஆளில்லா விமானம் கணினி மூலம் இயங்கும் பிறகு அதிக நேரம் வானில் நிற்கும் என்ற பல பல வியக்கத்தக்க விசயங்கள் அதில் உண்டு.

இந்த விமானத்தை மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடைபெற்று வருகிறது. எப்போதும் தல தளபதி என்றாலே மாஸ் தான்.இது தல ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தளபதி ரசிகர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்று.