சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்த பிகில் பட நடிகை….. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிகில். இந்த திரைப்படத்தில் பல நடிகைகளும் விஜயுடன் இணைந்து கால்பந்தாட்ட டீமில் நடித்திருந்தனர். அதில் நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் பல சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அசத்தியுள்ளனர்.

அவ்வகையில் பிகில் படம் மூலமாக பிரபலமான நடிகை காயத்ரி ரெட்டி கடந்த வருடம் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.அதே சமயம் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்த நிலையில் தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸ் ஆக நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார். தற்போது திருமணத்தையும் சிம்பில் ஆகவே நடத்தி முடித்து உள்ளார்.

அதிகாரப்பூர்வமாக தனது கணவரை அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் காயத்ரி ரெட்டிகே பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.