தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கும் திருமணமானது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஹிட்டான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேகான “ஏ மாய சேஸாவே” படத்தில் இருவரும் நடித்தனர்.

அந்த படத்தில் நடிக்கும் முதலே காதலித்து வந்தனர், 8 வருடங்களுக்கு பின் இருவருக்கும் திருமணமானது, திருமணத்திற்க்கு பின்னரும் இருவரும் படத்தில் நடிப்பதை தொடர்ந்தனர். கடைசியாக மஜிலி என்னும் படத்தில் இருவரும் நடித்தனர், இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது குடும்ப விழாவான அக்கினேனி தேசிய விருது வழங்கும் விழுவுக்கு வராமல் சமந்தா ஷூட்டிங்கில் பிஸியாகி விட்டராம்.

பின்னர் நாகேஸ்வரராவின் பேரனானா ஆதித்யாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டதாகவும், இதனால் சமந்தாவிற்கும் நாக சைதன்யா குடுபத்திற்கும் மனக்கசப்பு இருப்பதாகவும், மேலும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் பிரிய உள்ளதாக டோலிவுட் வட்டாரம் கிசகிசுத்து வருகின்றது.
