சற்று முன்-தமிழில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த 45 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்தவரும் பிரபல நடிகை ஜெயபாரதியின் கணவருமான சத்தார் கல்லீரல் தொடர்பான பாதிப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த சத்தார் இன்று மரணமடைந்தார் 1976 ஆம் ஆண்டு வெளியான அனவரணம் என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சத்தார். தொடர்ந்து வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் மயில், சவுந்தர்யமே வருக ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சத்தார் மலையாளம், தமிழ், தெலுங்கில் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஒண்ணும் ஒண்ணும் மூணு என்ற திரைப்படம் கடந்த 2015-ல் வெளியானது.

சில காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்தார் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார்.  சத்தார் கடந்த 1979 ஆம் ஆண்டு நடிகை ஜெயபாரதியை

காதலித்து திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் சத்தாரின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.