தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் துணை நடிகையாகவும் இருந்து வருகிறார் நடிகை ரேகா. இவர் கோபிநாத் என்பவரை காதலித்து திருமனம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், கோபிநாத் டி.வீ.எஸ் காலனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக மணிபுரிந்து வந்துள்ளார். கோபிநாத்திற்கு தான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கும் மேல் கடன் பிரச்னை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று தனது மனைவி ரேகாவுடன் ஏற்பட்ட தகராறினால்
மன உளைச்சலுக்கு ஆளாகி அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் தூக்கிட்டு கொண்டார் என தெரிவிக்கின்றனர். பின் வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா என்று மேலும் விசாரணையில் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
