சற்று முன்- பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை மாரடைப்பால் மரணம்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட தமிழ் திரையுலனின் முன்னணி ஜாம்பவான்களுடன் நடித்துள்ளவர் கீதாஞ்சலி (72) சாரதா, தெய்வத்தின் தெய்வம், வாழ்க்கை படகு, ஆசை முகம், அதே கண்கள், என் அண்ணன், அன்னமிட்ட கை போன்ற ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள கீதாஞ்சலி தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் நோய்க்கான சிகிச்சையை அவர் பெற்று வந்தார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக கீதாஞ்சலி இன்று காலை மரணமடைந்தார். மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் கடந்த 2001ஆம் ஆண்டு தனது 62வது வயதில் உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.