சற்று முன் வெளியான கலைஞர் கருணாநிதி மருத்துவமணியில் இருக்கும் வீடியோ

நேற்று இரவு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.நாடித் துடிப்பின் அளவு குறைந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்த தகவல் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் உடன்பிறப்புகளுக்கு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்ட ஒட்டுநர் இல்லாத காரணத்தால், பைக்கில் அவசரமாக சென்றுள்ளார். அதே போன்று, ஹொட்டலில் தங்கியிருந்த அழகிரியும் பதற்றத்துடன் அங்கு இருந்து விரைந்து புறப்பட்டார்.

அதிகாலை 1.30 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் தலைவர் கருணாநிதி. 20 நிமிடங்கள் நீடித்த சிகிச்சையின் பயனாக, அவர் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியானது.இதனால் சற்று பரபரப்பு குறைந்தது.கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுவரும் ஏற்ற இறக்கங்களால் . ஒரு நிலையான உடல்நிலையாக இல்லை அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

குறிப்பாக, ‘ட்ரக்கியோஸ்டமி குழாயை மாற்றுவதற்கு, மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதால்தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்புவரை, அவர் நன்றாகத்தானே இருந்தார். வீட்டிலேயே ஏன் வைத்திருக்க வேண்டும்? அவர் நன்றாக இருக்கிறார் என்பதால்தானே நாங்கள் எல்லாம் வராமல் இருந்தோம் என அழகிரி மனம் வருந்தி அழுதுள்ளதாக கூறப்படுகிறது.ஆனாலும் அழகிரி தான் தலைவர் கூடவே இருந்ததாக கூறப்படுகிறது.அவரது வீட்டிலிருந்து மருத்துவமனை வரையிலான கருணாநிதியின் நேற்றைய பரபரப்பு நிமிடங்கள் இதோ


நள்ளிரவு 12 மணி – திமுக தலைவர் கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், கோபாலபுரம் இல்லம் வருகை,12.10 மணி – தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வருகை, 12.15 மணி – கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்  12.20 மணி -மு.க. அழகிரி கோபாலபுரம் வருகை, 12.23 மணி – தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் கோபாலபுரம் வருகை.12.30 மணி – முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோபாலபுரம் வருகை. 12.40 மணி – கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் கோபாலபுரம் வருகை, 12.50 மணி – கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள் வருகை

1 மணி – காவிரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தது.1.10 மணி – காவிரி மருத்துவமணையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர.1.20 மணி – கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவிரி மருத்துவமனை புறப்பட்டார்,1.30 மணி – காவிரி மருத்துவமனையில் 4-வது மாடியில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதி,1.40 மணி – ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் காவிரி மருத்துவமனை வருகை,2.20 மணி – கருணாநிதியின் ரத்த அழத்தம் சீரானதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் ஆ.ராசா பேட்டி.2.30 மணி – சிகிச்சைக்குப் பின் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை