சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் தேதியின் புதிய அப்டேட் .

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான்  படமானது பெரும் எதிர்பார்ப்புகளிடையே உருவாகியுள்ளதால் நாளுக்கு நாள் அதனை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமும் கூடிகிட்டே வருகிறது.

 

இந்த படமானது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது சில நாட்கள் முன்பு இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனிடையே இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் அன்று அப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.