திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் திருமணத்தில், மணமேடையில் மணமகள் ஒருவர் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் மணமகள் பிரபலமான ஒரு குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. புல்லட்டு வண்டியில் பாடலுக்கு மணமகள் நடனம் ஆட, மாப்பிள்ளை மணமகளின் நடனத்தை பார்த்து கொண்டு நின்றிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…