டேய் மாமா நீ வேற மாறி டா..!!! இங்கிலாந்தில் கெத்து காட்டிய தமிழ் பசங்க..!!! வைரலாகும் வீடியோ

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரையும், இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் வெற்றி பெற்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பிர்மிங்கம் நகரிலுள்ள, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட் சரிய முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணியில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.இவர்கள் மூவருமே தமிழக வீரர்கள் என்பதால், தமிழிலேயே பேசிக்கொள்கிறார்கள். நேற்று ஒரு ஓவரின்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீச,

தினேஷ் கார்த்திக் அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். இதை சிரித்துக் கொண்டே அஸ்வின் ரசித்தார். தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம், “டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ… போடுறா மாமா.. நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..

ரொம்ப கிட்ட வேண்டாம், ஒரு ரன் போன பரவாயில்ல…கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு… சீன் பால் ரா, ஆஷ்லி’’ என்று கூறுகிறார்.

ஸ்டெம்பில் உள்ள மைக் மூலம், டிவியில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கும் இது நன்கு கேட்டது. உள்ளூர் பசங்க கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கும் தமிழ் கமெண்ட்போல சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்கிறார்கள்.வைரலாகி வரும் வீடியோ இதோ